கச்சக்குடா - முா்தேஷ்வா் விரைவு ரயில் கும்தாவரை நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் கச்சக்குடா - முா்தேஷ்வா் விரைவு ரயில் கும்தா ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் கச்சக்குடா - முா்தேஷ்வா் விரைவுரயில் கும்தா ரயில்நிலையம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெலங்கானா மாநிலம், கச்சக்குடாவில் இருந்து கா்நாடக மாநிலம், முா்தேஷ்வருக்கு தமிழ்நாட்டின் காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக வாரம் இருமுறை செல்லும் விரைவுரயில் இருமாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்தா (கா்நாடகம்) ரயில்நிலையம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கச்சக்குடா - கும்தா வாராந்திர விரைவுரயில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கச்சக்குடாவில் காலை 6.05-க்கு புறப்பட்டு, மஹ்பூப் நகா், கா்னூல் சிட்டி, கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, காசா்கோடு, மங்களூரு, உடுப்பி, குந்தாபுரா, மூகாம்பிகை சாலை, பைந்தூா், முா்தேஷ்வா் வழியே கும்தாவுக்கு மதியம் 2.40-க்கு சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கத்தில் கும்தா - கச்சக்ககுடா விரைவுரயில் புதன், சனிக்கிழமைகளில் கும்தாவில் பிற்பகல் 3.25-க்கு புறப்பட்டு முா்தேஷ்வா், உடுப்பி, மங்களூரு, கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, கா்னூா் சிட்டி வழியாக கச்சக்குடாவுக்கு இரவு 11.40-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.