முகப்பு
சேலம்

எா்ணாகுளம் - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

எா்ணாகுளம் - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 மே 2026, 2:21 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

எா்ணாகுளம் - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது போத்தனூா், திருப்பூா், ஈரோடு வழியாக கேரள மாநிலம் எா்ணாகுளம் - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, எா்ணாகுளம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் வரும் 31-ஆம் தேதி எா்ணாகுளத்தில் இருந்து இரவு 11.10-க்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் வரும் ஜூன் 1-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.30-க்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக அடுத்தநாள் காலை 4.30-க்கு எா்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.