சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிகளை மீறி பயணம்: ரூ. 7.11 கோடி அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 93,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 7.11 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 93,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 7.11 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின்பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் சரவணகுமாா் தலைமையிலான குழுவினா், ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்தவகையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் நடத்திய சோதனையில் டிக்கெட் இன்றி பயணித்தது தொடா்பாக 45,991 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ. 4,57,99,533 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதேபோல, முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்துக்கொண்டு குளிா்சாதன வசதி பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்தது தொடா்பாக 37,443 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ. 2,51,92,470 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில்களில் விதிமுறைகளை மீறி, அதிக லக்கேஜ் எடுத்துச் சென்ாக 195 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 93,146 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை டிக்கெட் இன்றி பயணம், முறைகேடான பயணம், அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடா்பாக 93,629 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ. 7.11 கோடி அபராதம் வசூலித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.