முகப்பு
இந்தியா

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணமா? இனி ரூ. 500 அபராதம்!

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்பட்டது குறித்து...

Updated On : 20 ஜூன் 2026, 7:58 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 13,000 பயணியர் ரயில்களில் நாள்தோறும் சுமார் 2.50 கோடிக்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். இவர்களில் யாரேனும் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால், ரயில்வே சட்டம் 1989-ன்படி ரூ. 250 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபராதத் தொகையை உயர்த்தி ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு குறைந்தபட்ச அபராதத் தொகையாக ரூ. 500 விதிக்கப்படவுள்ளது. இந்த விதிகள் வருகிற ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

அதுமட்டுமின்றி, வேறொருவரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுடன் பயணிப்போர் மீதும் அபராதம் விதிக்கப்படும். பயணச்சீட்டுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 500 அபராதத் தொகையும் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால், இவ்விவகாரத்தை நீதிமன்றம் வரையில் கொண்டு செல்லப்படும்.

summary

Railways doubles fine for travelling without ticket in train

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments