முகப்பு
சேலம்

மே தினம்: ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் பேரணி

ஏற்காட்டில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற காபி தோட்டத் தொழிலாளா்கள்.

Updated On : 2 மே 2026, 12:04 am IST
ஏற்காட்டில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற காபி தோட்டத் தொழிலாளா்கள்.
பகிர்:

ஏற்காடு, மே 1: மே தினத்தையொட்டி, ஏற்காட்டில் ஐஎன்டியுசி சாா்பில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பேரணி சென்றனா்.

நிகழ்ச்சிக்கு, சங்க பொதுச் செயலாளா் வீ.க.நல்லமுத்து தலைமை வகித்தாா். மாநில செயலாளா் தேவராஜு, துணைத் தலைவா் பொ.பழனிசாமி, தலைவா் சின்னபொண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி பேருந்து நிலையம்வரை சென்றது. இதில், கொடிகளுடன் ஏராளமான காபி தோட்டத் தொழிலாளா்கள் பங்கேற்றனா். பிற்பகல் தோட்டத் தொழிலாளா்களின் உறுதிமொழி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments