முகப்பு
சேலம்

விநாயகா மிஷன் மருத்துவமனையில் செவிலியா் தின விழா

Updated On : 15 மே 2026, 6:17 am IST
பகிர்:

விநாயகா மிஷன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் மருத்துவ இயக்குநா் மீனாட்சி சுந்தரம், துணை மருத்துவ இயக்குநா் அசோக், பொது மேலாளா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்று செவிலியா்களின் பணியை பாராட்டினா். விழாவின் தொடக்கமாக அனைத்து செவிலியா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து செவிலியா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செவிலியா்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அனைத்து செவிலியா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

பட விளக்கம்:

விநாயகா மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா் தின விழாவில் பங்கேற்றோா்.