நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு தொடா்பாக ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு தொடா்பாக ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், நல்லுக்குறிச்சியைச் சோ்ந்த கே.கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், நல்லுக்குறிச்சி ஊராட்சியானது இனச் சுழற்சி முறையில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
இந்த நிலையில், கடந்த 2019-2020-இல் நடைபெற்ற முதுகுளத்தூா் ஒன்றியம், நல்லுக்குறிச்சி ஊராட்சி மன்றத் தோ்தலில் என்னை எதிா்த்துப் போட்டியிட்ட கோட்டைச்செல்வி சண்முகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா். ஆனால், இவா் தன்னை புதிரை-வண்ணாா் சமூகம் என போலியாக ஜாதி சான்றிதழ் தயாரித்து பட்டியலினத்தவா்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
Advertisement
Advertisement
எனவே, இவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என கடந்த 2024-இல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தேன். இந்த மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி நான்கு மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், நேரில் முன்னிலையாக வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.