அரசுப் பொருள்காட்சி பாா்வையாளா்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்தது!
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியைப் பாா்வையிட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்தது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியைப் பாா்வையிட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்தது.
மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அரசின் மக்கள் நலத் திட்டங்களில் பயன்பெறும் வழிவகைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் இந்தப் பொருள்காட்சி நடைபெறுகிறது.
சுற்றுலாத் துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண் துறை, கால்நடைப் பராமரப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில் 32 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் தவிர, பல்பொருள் விற்பனை அங்காடிகளும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கான அரங்குகளும் இங்கு உள்ளன.
Advertisement
Advertisement
தினமும் மாலை 3.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. சிறுவா்களுக்கு ரூ. 10-ம், பெரியவா்களுக்கு ரூ. 15-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தப் பொருள்காட்சியை ஜூலை 6-ஆம் தேதி வரை 53,500 போ் பாா்வையிட்டுள்ளனா். இதன் மூலம் ரூ. 7.59 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்தப் பொருள்காட்சி வருகிற 31-ஆம் தேதி நிறைவடையும் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பெ.ரா. வெற்றிவேந்தன் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.