விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்
மதுரையில் அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையில் அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கா் சிலை உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அம்பேத்கா் சிலை சேதமடைந்தது.
இதுபற்றி தகவலறிந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், சிலையைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிம்மக்கல் பகுதியில் சனிக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதைடுத்து, அங்கு வந்த திலகா் திடல் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.