விவசாயி கொலை: ஒருவர் கைது
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பநாயக்கர் (68). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமிக்கும் (40) நிலப் பிரச்னை இருந்து வந்தது. சனிக்கிழமை தனது நிலத்தில் டிராக்டரை கொண்டு பொன்னுச்சாமி உழுதாராம்.
அப்போது, அய்யப்பநாயக்கர் சென்று நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நிலத்தில் எப்படி உழலாம் எனக் கேட்டு தகராறு செய்தாராம்.
Advertisement
Advertisement
அப்போது ஏற்பட்ட தகராறில், பொன்னுச்சாமி தான் வைத்திருந்த குத்திடியால் அயப்பநாயக்கரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சடலத்தை, அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினர்கள் கருப்பணகவுண்டர்,சின்னச்சாமி ஆகியோர் உதவியுடன் அருகில் இருந்த கிணற்றில் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அய்யப்பநாயக்கர் மகன் திருமலைசாமி அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் பொன்னுச்சாமியைக் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.