திண்டுக்கல்

10 ஆம் வகுப்பு தேர்வு: வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதி பள்ளிகள் தேர்ச்சி விகிதம்

DIN

பத்தாம் வகுப்பு தேர்வில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி: இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து அப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இப்பள்ளியைச் சேர்ந்த ஏ.கிருத்திகா- 496, எஸ்.சுவாதி- 491, ஜே.சினிதேவதர்சனி, எம்.சுவேதா ஆகியோர் தலா 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 5 பேரும், அறிவியலில் 15 பேரும், சமூக அறிவியல் 36 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனர். மாணவ- மாணவிகளை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ராஜாராம், பள்ளித் தலைவர் கருணாகரன், செயலர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
நிலக்கோட்டை குமரப்ப மெட்ரிக். பள்ளி: இப்பள்ளியைச் சேர்ந்த கிருபா- 497, தேவராஜராஜன்- 496, நிவோசின்- 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 14 பேரும், அறிவியலில் 13 பேரும், சமூக அறிவியலில் 32 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய 69 பேரும் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை பள்ளித் தாளாளர் திருநாவுக்கரசு, நிர்வாக இயக்குநர் அண்ணாமலை, பள்ளி முதல்வர் ஜெய்சங்கர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் 95 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்துஸ்ரீ- 487 மதிப்பெண் எடுத்தார். அறிவியலில் 9 பேரும், சமூக அறிவியலில் 3 பேரும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 16 பேர் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 49 மாணவியர் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். இவர்களை பள்ளிச் செயலர் ராமதாஸ், தலைமையாசிரியை ஜாய் சந்திரலீலா மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT