திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கோயில் பாதை திறப்பு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே  பக்தர்கள் வசதிக்காக கோயில் பாதை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சிந்தலப்பட்டி ஊராட்சி நசச்சியப்பகவுண்டன்வலசு கிராமத்தில் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஆக்கிமிரப்பை அகற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பேரில் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு மண் சாலையாக மாற்றப்பட்டது. அந்த சாலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
     இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எஸ்.செந்தில்குமார் சாலையை திறந்து வைத்தார்.   இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ரகுபதி, பாஜக மாவட்டத்தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி, இந்து முன்னணி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் ரவிச்சந்திரன், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT