திண்டுக்கல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

DIN

திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கே. மணிவண்ணன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின்போது குறும்படம் திரையிடப்பட்டு, சாலை விபத்துகளுக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆய்வாளர் விஜயகுமார் பேசுகையில், சாலை விதிகள், மோட்டார் வாகன விதிகள், காப்பீட்டுத் திட்டங்களின் அவசியம், ஓட்டுநர் உரிமம், தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ஏபிசி கல்லூரி வளாக அரிமா சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, விரிவுரையாளர் இந்துமதி வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT