திண்டுக்கல்

நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

DIN

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(ஆக.16) நடைபெறுகிறது.
 இது தொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளது:  படித்த வேலை வாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவும் வகையில், வேலை வாய்ப்புத் துறை சார்பில் தனியார் நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முகாமில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் சுய விவரக் குறிப்புடன் கலந்து கொள்ளலாம். 
 இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 0451-2461498 என்ற எண்ணில் மாவட்ட  வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT