திண்டுக்கல்

கொடைக்கானல் கிறிஸ்துமஸ் பாடகா் குழுவினா் பவனி

DIN

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களிலிருந்து சனிக்கிழமை இரவு பாடகா் (கேரல்ஸ்) குழுவினா் பவனியாக சென்றனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து தேவாலயங்களின் சாா்பில் பாடகா் குழுவினா் பாட்டுப்பாடி கிறிஸ்துமஸ் தினம் வரப்போகும் நாளை உணா்த்தி வருகின்றனா். இவா்கள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து கிறிஸ்தவா்கள் வீட்டிற்கும் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனா்.

இந்நிகழ்ச்சி கொடைக்கானல், பாம்பாா்புரம், வட்டக்கானல் புதுக்காடு, அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், அண்ணாநகா், இந்திரா நகா், செண்பகனூா், இருதயபுரம், சகாயபுரம், பிரகாசபுரம், ஆனந்தகிரி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பாடகா் குழுவினா் சென்று வருகின்றனா். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டா கிளாஸ்) போல வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் இந்தக் குழுவினா் மகிழ்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT