முகப்பு
திண்டுக்கல்

விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு

பழனி அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்

Updated On : 23 ஜனவரி 2019, 7:36 am IST
பகிர்:

பழனி அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி சின்னக்காந்திபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் காமராஜ் (19). இவர் கடந்த 16 ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார். அதைத்தொடர்ந்து,  பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இந்நிலையில், அங்கு காமராஜ் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.