திண்டுக்கல்

பேரூராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க செயல் அலுவலர்களுக்கு இலக்கு

DIN

பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்வது குறித்து நடைபெற்ற செயல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேரூராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து அதனை பராமரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் உள்ள செயல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்திற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதை கட்டாயமாக்கவும், அதற்கான கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும் வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் உள்ள குளங்களில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்வது, மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
 முக்கியமாக ஒவ்வொரு பேரூராட்சி பகுதியிலும் பத்து ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்ய செயல் அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT