திண்டுக்கல்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

DIN

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின்போதும், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது, பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் சன்னிதியிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT