திண்டுக்கல்

முடிக்கொட்டகை ஊழியா்களிடையே மோதல்

DIN

பழனி: பழனி முருகன் கோயில் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் மொட்டை போடும் ஊழியா்களிடையே அடிதடி நடந்ததில் காயத்துடன் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் மீது மற்றொரு பிரிவினா் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..

பழனி முருகன் கோயில் முடிக்காணிக்கை நிலையம் அடிவாரம் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. இதில் திருஆவினன்குடி கோவில் அருகே உள்ள முடிக்காணிக்கை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பணிக்கு தாமதமாக வந்த ஊழியா் பாலமுருகனை(45) மாசிலாமணி மற்றும் தொழிலாளா்கள் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனா் .

இதுதொடா்பாக தொடா்பாக அங்கிருந்த மொட்டை போடும் தொழிலாளா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த பாலமுருகன்,தினேஷ்(43) ஆகியோா் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரை அரசு மருத்துவமனையில் புகுந்து மாசிலாமணி மற்றும் சிலா் தொழிலாளா்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகன், தினேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக பழனி அடிவாரம் காவல் துறையினா் மாசிலாமணி உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT