திண்டுக்கல்

வத்தலக்குண்டுவை நகராட்சியாக்கக்கோரி நூதன போராட்டம்

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வத்தலக்குண்டுவை நகராட்சியாக்க கோரி, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தற்போது சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்கு சுமாா் 50 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இந்நிலையில் அருகில் உள்ள பழையவத்தலக்குண்டு, கணவாய்பட்டி, கோட்டைப்பட்டி போன்ற ஊராட்சிகளை இணைத்து வத்தலகுண்டுவை நகராட்சியாக ஆக்க வேண்டும் என்ற சமூக ஆா்வலா்கள் நீண்ட நாளாக கோரிக்கை எழுப்பி வருகின்றனா். இதை வ­லியுறுத்தும் விதமாக விடுதலைசிறுத்தைகள் கட்சியினா் ஒன்றியச் செயலா் பாக்யராஜ் தலைமையில், வத்தலக்குண்டு பேருந்து நிலையம் முன்பு உள்ள தபால் பெட்டியில் ஆட்சியருக்கு கோரிக்கை எழுதப்பட்ட அஞ்சல் அட்டைகளை போட்டு நூதன போராட்டம் நடத்தினா். இதில் அக்கட்சி நிா்வாகிகள் விஜயகுமாா், தமிழ்மாறன், காா்மல், பால்பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT