திண்டுக்கல்

பழனி அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

பழனி அருகே உள்ள ஆயக்குடி பாப்பாகுளத்தில் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை  அகற்றப்பட்டன.
ஆயக்குடியில் 175 ஏக்கர் பரப்பளவில் பாப்பாகுளம் உள்ளது.  இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில்  குளத்தை ஆக்கிரமிப்பு 
செய்து கொய்யா மற்றும் இலவம் போன்ற நீண்ட கால பயிர்களை சிலர் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக குளத்தினுள் 1,000 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்யப்பட்டது. இது குறித்து அண்மையில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து,  பாப்பா குளத்தில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.  
இதையடுத்து வெள்ளிக்கிழமை பழனி சார் -ஆட்சியர் உமா தலைமையில் வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  இதில், குளத்தை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கொய்யா மற்றும் இலவ மரங்கள், சட்டவிரோதமாக போடப்பட்ட ஆழ்துளை கிணற்று மோட்டார் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. 
தொடர்ந்து குளத்தின் எல்லைகளை வரையறை செய்து எல்லை கற்கள் ஊன்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல பழனி பகுதியில் உள்ள மற்ற நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT