திண்டுக்கல்

வேடசந்தூர், கொடைக்கானலில் மழை

DIN

திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியில் அதிகபட்சமாக 34.3 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், இரவு நேரத்தில் பெய்து வரும் மழை பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 
அதேபோல் ஞாயிற்றுக்கிழமையும் திண்டுக்கல், வடமதுரை மற்றும் வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது பெய்து வரும் மழை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 20.6, கொடைக்கானல்- 5.4, நத்தம் - 1, நிலக்கோட்டை -14.4, வேடசந்தூர் - 34.3, காமாட்சிபுரம் - 27.7, வேடசந்தூர் புகையிலை நிலையம்- 34.5, கொடைக்கானல் போர்ட் கிளப் - 2.
கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாகவே மேகமூட்டமும் ,அவ்வப் போது மிதமான மழை பெய்து வருகிறது . வெயிலின் தாக்கம் இல்லாததால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. 
இந்த மழையால் பல்வேறு பகுதிகளில்  நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.  இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT