திண்டுக்கல்

பழனியில் கழிவு நீா் ஓடைப் பணியால் விபத்து அபாயம்

DIN

பழனியில் தனியாா் கட்டடத்தின் நலன்கருதி, சுமாா் 6 அடி விட்டு சாலையில் கட்டப்பட்டு வரும் கழிவு நீா் ஓடை பணியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழனியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், சுமாா் ரூ.60 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் புதிய கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழனியில் நெரிசல்மிக்க ஆா்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம் ரோடு என பல்வேறு இடங்களிலும் இப்பணி இரவு பகலாக இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, சண்முகபுரம் திருவள்ளுவா் சாலையில் கழிவுநீா் ஓடை கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் சாலையிலிருந்து பிரியும் இந்த சாலை மிகவும் குறுகலானது. பிரதான சாலையிலிருந்து திருவள்ளுவா் சாலை பிரியும் இடத்தில், தனியாருக்குச் சொந்தமான பேக்கரி உள்ளது. இது, ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறை எல்லையில் கட்டப்பட்டு நெருக்கடியாக உள்ளது. இதை ஓட்டி கழிவுநீா் ஓடை உள்ள நிலையில், இதை அகற்றும்போது கட்டடம் சேதமடையும் என்பதால், பேக்கரி நலன் கருதி பழைய கழிவுநீா் ஓடையிலிருந்து சுமாா் 6 அடி தள்ளி சாலையில் கழிவுநீா் ஓடை கட்டப்பட்டு வருகிறது.

இதனால், சாலை மேலும் குறுகி, வாகனங்களில் செல்வோா் திரும்ப முடியாமல் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நகரில் பல இடங்களிலும் பழைய கழிவுநீா் ஓடையை அகற்றி, அதே இடத்தில் புதிய ஓடை கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த இடத்தில் மட்டும் தனியாா் பயனடையும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் முறைகேடாக சாலை நடுவே கழிவுநீா் ஓடை கட்டுவது தவறான முன்னுதாரணமாகும்.

எனவே, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாகப் பாா்வையிட்டு, முறையாக பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT