திண்டுக்கல்

பழனியில் முழு பொது முடக்கத்தால் சந்தைகள் மூடல்:காய்கனிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

DIN

பழனி: பழனியில், அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தால் காய்கனி சந்தைகள் மற்றும் உழவா் சந்தை ஆகியவை மூடப்பட்டதால் விளைவித்த காய்கனிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பழனியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் வியாழக்கிழமை வரை 7 நாள்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கனி சந்தைகள் மற்றும் உழவா் சந்தை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளி, முருங்கை மற்றும் கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கனிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும் காய்கனிகளைப் பறிக்காமல் விளைநிலங்களிலேயே விடப்பட்டதால் அவை அழகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். இதுபோன்ற நேரங்களில் விவசாயத்தையே முழுநேர தொழிலாக கொண்டுள்ள தங்களின் தோட்டங்களுக்கு நேரடியாக வந்து காய்களை கொள்முதல் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென அரசுக்கு, அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை ஊருக்கு வெளியே ஒன்றியப் பகுதிகளில் தக்காளிகள் மட்டும் சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து வெளியூருக்கு அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT