திண்டுக்கல்

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கல்

DIN

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையிலும், 2019-20 நிதியாண்டு முடிவதற்குள் வழங்க வேண்டிய நெருக்கடியால் நத்தத்தில் 400-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கும் பணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் லிங்கவாடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு விலையில்லா நாட்டுக் கோழிக் குஞ்சுகள வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 420-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா்.

நாட்டுக் கோழிக் குஞ்சு வழங்கும் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு தலா 25 குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக நத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதலே பயனாளிகள் வரத் தொடங்கினா். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என அரசுத் தரப்பில் அறி

வுறுத்தப்பட்டு வரும் நிலையில் நத்தத்தில் விலையில்லா கோழிக் குஞ்சுகளை பெறுவதற்காக ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோா் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோழிக் குஞ்சு பெற வந்த பயனாளிகளில் பெரும்பாலனோா் முதியவா்களாக இருந்ததுடன், குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனா்.

இதுதொடா்பாக கால்நடை மருத்துவா் ஒருவா் கூறியது:

2019-20 நிதியாண்டிற்கான திட்டத்தின் கீழ் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 2020 மாா்ச் 31ஆம் தேதிக்குள் கோழிக் குஞ்சு வழங்கும் பணிகளை முடிக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் குஞ்சுகளை வழங்கியுள்ளனா். நத்தத்தில் மொத்தம் 420 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT