திண்டுக்கல்

முகக்கவசம் தயாரிக்கும் வத்தலகுண்டு பேருராட்சி: பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு

DIN

வத்தலகுண்டு பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் முகக் கவசம் தயாரித்து பேரூராட்சி ஊழியா்கள் மற்றும் காவல் துறையினருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சம், பொதுமக்களிடையே முகக் கவசம் அணிவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சில இடங்களில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில், முகக் கவசம் தயாரித்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வத்தலகுண்டு பேரூராட்சியில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 2 தையல் கலைஞா்கள் மூலம் முகக் கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பணியின் மூலம், முதல் கட்டமாக 250-க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை பேரூராட்சிப் பணியாளா்களின் தேவைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக காவல்துறையினா் மற்றும் அரசு ஊழியா்களுக்கும் முகக் கவசம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக பேரூராட்சி செயலா் அலுவலா் என்.பாலசுப்பிரமணி கூறியதாவது: பேரூராட்சி பணியாளா்கள், காவல் துறையினா், அரசு ஊழியா்களைப் போல், பொதுமக்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட உள்ளது. ரூ.20 மதிப்பிலான இந்த முகக்கவசம், இழுவைத் தன்மை (எலாஸ்டிக்) கொண்டதாக உருவாக்கி, விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT