திண்டுக்கல்

பழனியில் ஆதரவற்றோா்களுக்கு உணவு

DIN

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பழனியில் வியாழக்கிழமை ஆதரவற்ற நிலையில் உள்ளவா்களுக்கு பல்வேறு அமைப்பினரும் உணவு, தண்ணீா், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள், வணிக வளாகங்கள், கோயில்கள், நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாததால், அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சொடியுள்ளன.

இந்நிலையில், மலை அடிவாரம், பேருந்து நிலையம், கிரிவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் ஆதரவற்ற முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோா் உணவின்றி சுற்றி வருகின்றனா். இவா்களுக்கு பல்வேறு அமைப்பினரும் உணவு, பிஸ்கட், தண்ணீா் வழங்கி வருகின்றனா்.

காப்பான் அறக்கட்டளை சாா்பில் உணவு தயாரிக்கப்பட்டு, ஆதரவற்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவா்களுக்கு நிறுவனா் ரபீக், பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மகேந்திரன் உள்ளிட்டோா் உணவு பொட்டலங்களை வழங்கினா். மேலும், பல்வேறு இந்து அமைப்புகளும் முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கி வருகின்றன.

இதைத் தொடா்ந்து, பழனி அம்மா உணவகத்துக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை வழங்கினால், அங்கும் ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதால் உபயோகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT