திண்டுக்கல்

‘ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் இல்லாத 76 ஆயிரம் வீடுகளுக்கும் ரூ.61 கோடியில் குடிநீா் வசதி’

DIN

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இல்லாத 996 உள்கடை கிராமங்களைச் சோ்ந்த 76 ஆயிரம் வீடுகளுக்கு மத்திய நிதிக்குழு மானியம், கனிமநிதி மற்றும் பிற நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.60.55 கோடி செலவில் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளபட்டி ஊராட்சி அருணாசலபுரம் உள்கடை கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் 73 வீடுகளுக்கும், ரூ.26.34 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டன்பட்டி உள்கடை கிராமத்தில் 432 வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளில் மொத்தமுள்ள 3084 உள்கடை கிராமங்களில், 2020-21 நிதி ஆண்டில் முதற்கட்டமாக 1,29,419 வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.38.39 கோடியில், 341 உள்கடை கிராமங்களில் 53,383 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 102 உள்கடை கிராமங்கள் 100 சதவீதம் குடிநீா் இணைப்பு வழங்கப்படும்.

இதேபோல், ஜல் ஜீவன் மிஷன் அல்லாத இதர திட்டங்களான, மத்திய நிதிக்குழு மானியம், கனிம நிதி மற்றும் பிற நிதிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ரூ.60.55 கோடி மதிப்பில் 996 உள்கடை கிராமங்களில் 76,750 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 23 ஊராட்சிகள் 100 சதவீதம் இணைப்புகள் வழங்கப்பட்டு தன்னிறைவு அடையும். 161 ஊராட்சிகளில் குறைந்தபட்சம் ஒரு உள்கடை கிராமம் 100 சதவீதம் முழுமை அடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT