திண்டுக்கல்

கொசு ஒழிப்பு களப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

DIN

தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் கொசு ஒழிப்பு களப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு கொசு ஒழிப்பு மஸ்தூா் களப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் எஸ்.வேல்முருகன் கூறியதாவது:

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் கீழ் கொசு ஒழிப்பு மஸ்தூா் களப் பணியாளா்களாக சுமாா் 10ஆயிரம் போ் மாநிலம் முழுவதும் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் களப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஊதிய உயா்வு கோரியும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாளொன்றுக்கு ரூ.389 வீதம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து மாதாந்திர ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை ஆய்வாளா்களின் கீழ் பணிபுரிந்துவிட்டு, ஊராட்சி ஒன்றியங்களில் ஊதியம் பெற்று வருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் எங்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. கரோனா தொற்று பரவல் காலத்தில், கரோனா தடுப்பு பணிகளையும் சோ்த்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, கொசு ஒழிப்பு களப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT