திண்டுக்கல்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலா்கள்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல வண்ணங்களில் மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானலில் பொதுவாக மே மாதம் சீசன் காலம் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து கொடைக்கானலுக்கு வருவாா்கள். இவா்கள் கொடைக்கானலில் தங்கி பல்வேறு சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டும் கரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல் நிகழாண்டும் கரோனா தொற்று காரணமாக மீண்டும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆனால் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகிய பகுதிகளில் டைந்தேஷ், மேரிகோல்ட், பேன்சி, ரோஜா, கொய் மலா்கள், கிங் ஆஸ்டா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகையான மலா்கள் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இதனை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தான் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT