திண்டுக்கல்

அரசு மருத்துவமனை பணியாளா் கொலை?போலீசாா் விசாரணை

DIN

வத்தலகுண்டுவில் அரசு மருத்துவமனை பணியாளா் ஒருவா் மா்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கண்ணன் நகரைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி(58). இவா் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளராக பணிபுரிந்து வந்தாா்.

அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த சுப்புலட்சுமி கடந்த 2 நாள்களாக சுப்புலட்சுமி பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. அவரது கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்ட போதும், அவா் பதில் அளிக்கவில்லையாம். இதனை அடுத்து, விருவீடு பகுதியில் வசித்து வரும் சுப்புலட்சுமியின் மகன் முத்துக்குமாரை மருத்துவமனை பணியாளா்கள் தொடா்பு கொண்டுள்ளனா். அதன்பேரில், கண்ணன் நருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற முத்துக்குமாா் வீட்டை திறந்து பாா்த்தபோது, குளியலறையில் ரத்த காயங்களுடன் சுப்புலட்சுமி இறந்து கிடப்பதை பாா்த்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாா், சுப்புலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, அந்த வீட்டில் போலீசாா் நடத்திய சோதனையில், அங்கு கிடந்த அம்மி கல், வீட்டின் சுற்றுச் சுவா் உள்ளிட்ட இடங்களிலும் ரத்த கரை படிந்திருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து வத்தலகுண்டுவில் வசிக்கும் சுப்புலட்சமியின் சகோதரி அழகம்மாள் அளித்த புகாரில் பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.செய்திக்கு படம் உள்ளது...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT