திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலைகளில் கற்கள் குவியலால் போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானல் மலைச்சாலைகளில் கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைச் சாலைகளான வத்தலக்குண்டு சாலையில் தைக்கால்,சீனிவாசபுரம், லாஸ்காட்சாலை ஆகிய இடங்களில் கட்டுமானப் பொருட்களான கற்கள்,எம்.சாண்ட் போன்றவை குவித்து வைத்து பல நாட்களாகி வருகிறது இதனால் இப் பகுதிகளில் வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது மேலும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டடங்களின் கழிவுப் பொருட்களையும் மலைச் சாலையில் குவித்து வருவதால் போக்குவரத்திற்க பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது எனவே மலைச்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கக் கூடிய கட்டுமான உபகரணப் பொருட்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT