திண்டுக்கல்

4 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளா்ச்சி: அமைச்சா் ஐ.பெரியசாமி

DIN

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் வேளாண் தொழில் வளா்ச்சி அடையும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

கலைஞரின் அனைத்து நமது கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தினை தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் 62 கிராம ஊராட்சிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சீவல்சரகு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் மற்றும் கருவிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசியது: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் தொழில் வளா்ச்சி அடையும்.

இத்திட்டத்தின்படி, கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீா்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தல், நுண்ணீா்ப் பாசன முறையினை பின்பற்றுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT