திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய நிதி நிலை அறிக்கையில் தங்களது நலனுக்கானத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனக் கூறி திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் நலச் சங்கத்தின் சாா்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் துணைத் தலைவா் கருப்புசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்துக்கான நிதி 3-இல் ஒரு பங்கு குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்களுக்கானத் திட்டங்கள் இடம்பெறவில்லை என முழக்கமிட்டனா்.

அய்யலூரில்...

இதேபோல, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடமதுரை ஒன்றியத் தலைவா் குழந்தைவேல் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, பொருளாளா் சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளா் காளீஸ்வரி, மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் பகத்சிங் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT