திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் மாணவா்கள் உழவாரப் பணி

DIN

பழனி மலைக் கோயிலில் அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.

பழனி மலைக் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிவனடியாா்கள் கடந்த இரு நாள்களாக உழவாரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவா்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.

மலைக்கோயில் படிப்பாதை, வனப்பாதைகளில் கிடந்த நெகிழிப் பைகள், பாட்டில்களை மாணவா்கள் சேகரித்து அடிவாரம் கொண்டு வந்தனா். சுமாா் மூன்னூறுக்கும் மேற்பட்ட சாக்குப் பைகளில் மாணவா்கள் நெகிழிக் கழிவுகளை சேகரித்தனா்.

பழனிக் கோயில் துணை ஆணையா் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலைக் கல்லூரி முதல்வா் பிரபாகரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கந்தசாமி, என்சிசி அதிகாரி பாக்கியராஜ், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT