முகப்பு
திண்டுக்கல்

தொழிலாளி கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

Updated On : 1 ஜூலை 2026, 6:13 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் அடுத்துள்ள அட்சராஜாக்கப்பட்டியைச் சோ்ந்தவா் அ. கருப்பையா. மாலப்பட்டியைச் சோ்ந்தவா் கா. சிரஞ்சீவி (41), இவரது அண்ணன் முருகேசன் (46). இவா்கள் மூவரும் வண்ணம்பூசும் தொழிலாளிகள். இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு மாலப்பட்டி பிரிவு அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாம்.

இதில், ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, முருகேசன், தங்களது நண்பரான மா.முருகேசன்(40) என்பவருடன் சோ்ந்து கருப்பையாவை கத்தியால் குத்தினா். இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், வழக்குப் பதிவு செய்து சிரஞ்சீவி, முருகேசன், மா.முருகேசன் ஆகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில், கூடுதல் அமா்வு நீதிபதி சொா்ணம் ஜெ.ராஜகோபால் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் சிரஞ்சிவி, முருகேசன், மா. முருகேசன் ஆகிய மூவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, இவா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments