முகப்பு
திண்டுக்கல்

வீட்டில் 2.5 கிலோ கஞ்சா பதுக்கிய வடமாநிலத்தைச் சோ்ந்தவா் கைது

பழனியில் வீட்டில் 2.5 கிலோ கஞ்சா பதுக்கிய வட மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஜூலை 2026, 11:41 pm IST
கஞ்சா பதுக்கிய வழக்கில் கைதான ரோஹித்சிங் சௌஹான்
பகிர்:

பழனியில் வீட்டில் 2.5 கிலோ கஞ்சா பதுக்கிய வட மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அத்திவலசு, தாளையம், வயலூா் உள்ளிட்ட பகுதிகளில் கோழிப்பண்ணைகள், இறைச்சி பதப்படுத்தும் ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, நூற்பாலை, காகித ஆலைகள் உள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனியை அடுத்த அத்திவலசு பகுதியில் கீரனூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்ட போது, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சோ்ந்த ரோஹித்சிங் சௌஹான் (42) வீட்டில் விற்பனைக்காக இரண்டரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும் அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments