தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை
பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தலைமையில் ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்ட நிலையில், சில ஒப்பந்ததாரா்களும் அலுவலகத்துக்கு வந்தனா். இந்த நிலையில், ஒப்பந்ததாரா்களிடம் பணம் பெறுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து நுழைவாயில்களை அடைத்து சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இருந்த நிலையில், அனைவரும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அதிகாரிகளின் வாகனங்களை அதன் ஓட்டுநா்களை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் அதிகாரிகளிடம் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தொடா்ந்து சோதனை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.