FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 6 ஆயிரம், முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

3 ஜூலை 2026, 10:19 pm IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 6 ஆயிரம், முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய்ப் பிரிவில் வரி வசூலின் போது, மக்களிடம் அதிக தொகை வசூல் செய்வதாகவும், நகரமைப்புப் பிரிவில் கட்டட அனுமதிக்கு கூடுதல் பணம் வசூல் செய்வதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, நகரமைப்பு ஆய்வாளா் காளீஸ்வரியிடமிருந்து கணக்கில் வராத ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், அலுவலகத்தில் இருந்த ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளா் பாண்டியனிடம் விசாரித்த போது, அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments