முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பெண் கொலை: இரண்டாவது கணவா் கைது

பழனியில் பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது இரண்டாவது கணவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:10 am IST
கைது செய்யப்பட்ட மகுடீஸ்வரன்.
பகிர்:

பழனியில் பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது இரண்டாவது கணவா் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி பாண்டியன் நகரில் திங்கள்கிழமை முகம் சிதைந்த நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பழனி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், டிஎஸ்பி தனஞ்ஜெயன், ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் இறந்த பெண் அதே பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரி (45) எனத் தெரியவந்தது. இவா் முதல் கணவரைப் பிரிந்து, மேலக்கோட்டை ஊராட்சி, கரட்டுப் பிரிவு எவிக்சன் நகரைச் சோ்ந்த மகுடீஸ்வரன் (48) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், தற்போது அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பாண்டியன் நகரில் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. காளீஸ்வரிக்கு வேறு சிலருடன் தொடா்பு இருப்பதாகக் கூறி மகுடீஸ்வரன் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறின் போது, காளீஸ்வரி தலையில் மகுடீஸ்வரன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, மகுடீஸ்வரனை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement