முகப்பு
திண்டுக்கல்

பழனி தண்டாயுதபாணி கோயிலில் அதிகபட்சமாக ரூ. 61 கோடி வருவாய்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கையாக ரூ. 61 கோடி கிடைத்துள்ளது. இது அதிகபட்ச ஆண்டு வருவாயாகும்.

Updated On : 1 ஜூலை 2026, 5:09 am IST
பழனி மலைக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் திறப்பின்போது காணிக்கையாக வரப்பெற்ற தங்க நகைப் பொருள்கள்
பகிர்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கையாக ரூ. 61 கோடி கிடைத்துள்ளது. இது அதிகபட்ச ஆண்டு வருவாயாகும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முடி காணிக்கை, பிரசாதம் விற்பனை, அா்ச்சனைச் சீட்டு, காவடிச் சீட்டு, கட்டண தரிசனம், கட்டளை தரிசனம், தங்கத்தோ் புறப்பாடு, தங்கத் தொட்டில் என பல்வேறு இனங்களில் வருவாய் கிடைக்கிறது.

பழனி கோயிலைப் பொறுத்தவரை ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை வருவாய் ஆண்டாக (பசலி) கணக்கிடப்படுகிறது. இதன்படி பழனி தண்டாயுதபாணி கோயில் கடந்த வருவாய் ஆண்டு (பசலி) செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதால் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் ரொக்கமாக ரூ. 1 கோடியே 40 ஆயிரத்து 575-ம், தங்கம் 187.200 கிராமும், வெள்ளி 4,035 கிராமும், வெளிநாட்டு பணத்தாள்கள் 255-ம் வருவாயாக கிடைத்தது. இதன்படி மொத்த உண்டியல் வருவாய் ரூ. 61 கோடியே 21 லட்சத்து 95 ஆயிரத்து 387 ஆண்டு வருவாயாக கிடைத்துள்ளது.

பழனி கோயில் ஆண்டு வருவாய் இதுவரை ரூ. 58 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 61 கோடியாக அதிகரித்துள்ளதாக திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments