ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வியாழக்கிழமை (ஏப்.5) ஆர்பாட்டம் நடத்த திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வியாழக்கிழமை (ஏப்.5) ஆர்பாட்டம் நடத்த திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.செயலாளர் கீதாஜீவன் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சிதம்பர நகரில் போராட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மார்ச் 31 -ஆம் தேதி மனு அளித்தோம். ஆனால் அனுமதி தரவில்லை. எனவே இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து போராட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 500 பேருக்கு மேல் ஆர்பாட்டத்தில் பங்கேற்க கூடாது. மேடை, ஒலி பெருக்கி அமைக்கக் கூடாது. வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது. மாணவர்களை பங்கேற்க அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை விதித்தார். இதை மனு தாரர் ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து வியாழக்கிழமை (ஏப்.5) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.