ஏப். 20-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.20) நடைபெறுகிறது.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.20) நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் வேளாண்மை தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
எனவே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.