மதுரை

பெண்களுக்கு ஆபத்து கால செயலி அறிமுகம்

DIN

மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் பெண்களுக்கு ஆபத்து கால செல்லிடப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக மதுரை மாநகரக் காவல்துறை செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக காவல்துறை உதவியை உடனடியாக பெறுவதற்கு பயன்படும் வகையில் பிரத்யேக எஸ்ஓஎஸ் செயலியை தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மதுரை மாநகரக் காவல்துறையில் எஸ்ஓஎஸ் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிக்குச்செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், வீட்டில் உள்ள பெண்கள் ஆகியோர் எஸ்ஓஎஸ் செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு ஆபத்து மற்றும் இக்கட்டான நேரங்களில் எஸ்ஓஎஸ் பொத்தானை அழுத்தினால் அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இந்த செயலியை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். எனவே பெண்கள் எஸ்ஓஎஸ் செயலியை பயன்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT