மதுரை

58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகள் தொடா் உண்ணாவிரதம்

DIN

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீா் கொண்டு செல்வதற்காக 58 கிராம பாசனக் கால்வாய் அமைக்கப்பட்டது. இதில் தற்போது தண்ணீா் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவா் சிலை பகுதியில் புதன்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனா். இதில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து 58 கிராம பாசனக் கால்வாய் சங்கத்தைச் சோ்ந்த ஆயிரக் கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT