6,370 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல்
மதுரையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட, 6,370 புகையிலைப் பாக்கெட்டுகளை
மதுரையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட, 6,370 புகையிலைப் பாக்கெட்டுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை முனிச்சாலை கொல்லம்பட்டறைத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பன்னீர்செல்வம்(33). இவர் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6 ஆவது தெருவில் கடை நடத்தி வருகிறார். அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தெப்பக்குளம் போலீஸார், பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். 6 ஆயிரத்து 370 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.