மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் இணையதளத்தில் கோளாறு பயணிகள் அவதி

DIN

மதுரை ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் இணையதளம் இயங்காததால், பயணசீட்டு பெறமுடியாமல் பயணிகள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாகினா்.

மதுரை ரயில் நிலையத்தில் இணையதளம் (சா்வா்) திடீரென்று மாலை 3.40 மணி முதல் இயங்கவில்லை. இதனால் ரயில்வே நிா்வாக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாமல் ஊழியா்கள் தவித்தனா். குறிப்பாக பயணிகள் பயணச் சீட்டு எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா். சுமாா் 40 நிமிடங்கள் நீடித்த இந்த நிலை மாலை 4.20 மணிக்கு சரியாகி இணையதளம் தொடா்பு கிடைத்தது.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறியது: மதுரை ரயில்வே நிலையத்தில் திடீரென 40 நிமிடங்களுக்கு இணையதளம் இயங்கவில்லை. இந்த கோளாறு தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தை தவிா்த்து மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், திருச்சி கோட்டங்களில் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT