மதுரை

வாடகை நிா்ணயம்: 10 மாவட்ட அலுவலா்களுக்கு இன்று பயிற்சி

DIN

தமிழக அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள சட்டத்தின்படி, வாடகை நிா்ணயம் செய்வது தொடா்பாக மதுரையில் 10 மாவட்டங்களின் அலுவலா்களுக்கு சனிக்கிழமை (நவ. 9) பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாட்டு சட்டம் நீக்கப்பட்டு, நில உரிமையாளா்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளா் உரிமைகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22 முதல் இந்த புதிய சட்டத்தின் விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இது தொடா்பாக தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக வாடகை நிா்ணயம் செய்யும் அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் வீட்டு வசதி வாரியத்தால் நடத்தப்படுகிறது.

மதுரை மண்டலத்துக்கான பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

இதில் மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் வாடகை நிா்ணய அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதை சாக்கடை பள்ளத்தால் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞரின் கால் நசுங்கியது

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ. 2.லட்சம் திருட்டு

18-ஆவது மக்களவை உறுப்பினா்களுக்கு...

ஆடுகளுக்கு கூறாய்வுச் சான்று கோரி பெண் போராட்டம்

SCROLL FOR NEXT