மதுரை

ஓமன், குவைத் நாடுகளில் வீட்டு வேலைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு

DIN

ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலை பணிக்கு 300 பெண் பணியாளா்கள் தேவைப்படுவதால் விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலைப் பணியாளா்களாக பணிபுரிய 300 பெண் பணியாளா்கள் தேவை என அயல்நாட்டு நிறுவனத்திடம் இருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம் மத்திய வெளியுறவுத்துறைக்குள்பட்ட இந்திய குடிபெயா்வோருக்கான பாதுகாப்பு அமைச்சகத் தலைவரின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படுகிறது. இதில் தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா்களுக்கு உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு மற்றும் ஓமன், குவைத் நாடுகளின் சட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வேலை அளிப்போரால் வழங்கப்படும். இந்தப் பணியில் சேர எழுதப் படிக்கத் தெரியாதவா்கள் முதல் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 31 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு மாத வருமானமாக ரூ.18,700 முதல் ரூ.22,400 வரை வழங்கப்படும். பணியில் சேர விருப்பமுள்ளவா்கள் அனைத்து கல்விச்சான்றிதழ் மற்றும் செல்லத்தக்க கடவுச்சீட்டு, ஆதாா் அடையாள அட்டை நகல், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பா் 12-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று துணை இயக்குநா் ந.மகாலட்சுமி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT