மதுரை

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் செங்கப்படை கிராமத்தை இணைக்கக் கோரிக்கை

DIN

திருமங்கலத்தை அடுத்த செங்கப்படை கிராமத்தை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில்  இணைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  
 திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செங்கப்படை கிராமத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 
இவர்களுக்கு செங்கப்படை கிராமத்தின் கண்மாய் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மேல்நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.  
இந்நிலையில் தற்போது ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதால் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதையடுத்து செங்கப்படை கிராம மக்கள் சுமார் 3 கி.மீ. தூரம் சென்று, நல்லூருக்குச் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பிலிருந்து கசியும் நீரை எடுத்து வந்து உபயோகிக்கின்றனர்.
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுகாதாரமில்லாத குடிநீரை எடுத்து வந்து, பருகுவதால் கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் செங்கப்படை கிராமத்தையும் சேர்க்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT